கோரை வேரில் இத்தனை மருத்துவ குணங்களா?

மணற்பாங்கான இடம், வயல் மற்றும் வளமான நிலம் மற்றும் பயிர்களுக்கு இடையே களையாகவும் சிறிய கோரை வளர்ந்திருக்கும். பன்றிகள் இதன் கிழங்கை விரும்பித் தின்னும். கிழங்குகள் வெளிப்பாகம் கறுப்பாக இருக்கும். உட்புறம் வெள்ளையாக இருக்கும். இது கசப்புத் தன்மையுடையது. ஆனால் நறுமணமாக இருக்கும்.

மருத்துவப்பயன்கள் -: கோரைக்கிழங்கு சிறுநீர், வியர்வை ஆகியவற்றைப் பெருக்குதல், உடல் பருமனைக் குறைத்து தாது வெப்பு அகற்றி பலமுண்டாக்குதல், இதயம், மூளை, வயித்துக்கு சக்தி, மாதவிடாய் தொல்லை, காச்சல், வாயுத்தொல்லை குணமடையச் செய்தல், கர்பப்பை கோளாறு குணப்படுத்தல், மார்பு வளர்ச்சி மற்றும் தாய் பால் சுத்தம் செய்தல் ஆகியவை செய்யும்.

பெருங்கோரையை வயல்களில் வளர்த்திப் பெரிதாக வளர்ந்த பின் அதை பாயாகப் பின்னுவார்கள்
ஆற்றில் ஆற்றின் ஓரங்களில் காணப்படும்.

கோரையின் சல்லி வேர்கள் பக்கவாட்டில் பரவி அதிகமாக உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும், விதை மூலமும் உற்பத்தியாகும்.

தட்டையான நீண்ட இலைகளையுடையது. முட்டை வடிவ சிறு கிழங்குகளைப் பெற்றிருக்கும். வளர்ந்த பின் உச்சியில் மூன்று பிறிவாக சிறு பூக்கள் கொண்டிருக்கும். இக்கிழங்குகளே மருத்துவப் பயனுடையது.

பச்சைக்கிழங்கை அரைத்து மார்பின் மீது பற்றுப்போட்டால் பச்ச உடம்புக்காரிக்குப் பால் சுரக்கும். தேள் கடி, குளவிக் கடி ஆகியவைகளுக்குப் பற்றிட்டால் குணமாகும். இதை உடல் மீது பூசினால் வியர்வை நாற்றம் வராது.

கிழங்கு சூரணம் 1 கிராம் காலை, மாலை தேனில் கொள்ள புத்திக்கூர்மை, தாதுவிருத்தி, பசித்தீவனம், உடற்பொலிவு உண்டாகும்.

கிழங்கை குடிநீர் செய்து காச்சிய பாலில் சேர்த்து மோராக்கி அதில் உணவு கொள்ளக் குழந்தைகளுக்குக் காணும் பசியின்மை செரியாமை தீரும்.

கோரைக்கிழங்கு, சந்தனம், வெட்டிவேர், பற்படாகம், பிரமட்டை, சுக்கு வகைக்கு 5 கிராம் சிதைத்து 500 மி.லி. நீரில் போட்டு 125 மி.லி.யாகக் காய்ச்சிக் காலை, மாலை கொடுத்து வரத் தாகத்துடன் கூடிய சுரம் நீங்கும்.

இரத்தக்கோளாறுகள், நுரையீரல் கோளாறுகள், சிறுநீர் தாரை சுத்தம் ஆகியவை குணமாகின்றது. கர்ப்பப் பையையும், மார்பகங்களையும் நன்கு வளர்ச்சியடையச் செய்கிறது. இதை 1-3 கிராம் பவுடராகவும், 10-70 மில்லிவரை கசாயமாகவும் குடிக்கலாம். குழந்தைகளுக்கும், பச்சை உடம்புக் காரிகளுக்கும் குடிக்கக்கொடுக்கக்கூடாது.

இஞ்சியும் கோரைக் கிழங்கையும் நன்கு தேன் விட்டு அரைத்து ஒரு சுண்டக்காயளவு கொடுத்தால் சீதபேதி குணமாகும்.

கோரைக் கிழங்கைப் பாலுடன் அரைத்துப் பசையாக்கி தலைக்குப் பூசினால் ஞாபகசக்தி கூடும். வலிப்பு நோய், காச்சல், பைத்தியம் குணமடையும்.

சித்த மருத்துவரின் ஆலோசனைப் படி கொடுக்க வேண்டும்.
ஆயுர்வேதத்தில் இதனை முஸ்தா என்பர்.

கோரைக்கிழங்குப் பவுடரை அரை தேக்கரண்டி வீதம் காலையும் இரவும் உணவுக்கு முன் நீர் அல்லது பால் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, வயிற்றுப்போக்கு நீங்கும்.
ஆச்சார்யர் சரகர் இந்த மூலிகையை அரிப்பு நிறுத்தும் வர்க்கம் ,தாகம் தீர்க்கும் வர்க்கம் ,தாய்ப்பால் சுத்தம் செய்யும் வர்க்கத்தில் சேர்த்துள்ளார் மேலும் பேதியை நிறுத்த உதவவும்,பசியை தூண்டவும் ,தோல் வியாதிகளிலும் உள்ள மருந்துகளிலும் பயன்படுத்தியுள்ளார் .

கிரஹநீ,தூக்கமின்மை ,ரக்த வியாதிகளில்,அக்கி -விசர்பம் ,வலிப்பு ,தோல் நோய்களில் உபயோகமாகிறது.

ஆச்சார்யர் வாக்பட்டர் காய்ச்சலை நிறுத்த சிறந்த மூலிகை என்று குறிப்பிடுகிறார்
கோரை கிழங்கு -ஜ்வரம்,கிருமி ,தாகம்,பேதி ,அரிப்பு ,
மஞ்சள் காமாலை ஹலீமகதில் -லோக பஸ்மதுடன்,கோரை கிழங்கு சூர்ணம் சேர்த்து -கருங்காலி கசாயந்துடன் பருக தீரும் (பாவ பிரகாஷ )என்னுடைய மருத்துவ அனுபவத்தில் சதை வலி களுக்கு மிக சிறந்த மருந்து.

எளிதாக கிடைக்ககூடிய ஆயுர்வேத மருந்துகளான முஸ்தாரிச்டம்,கங்காதர சூர்ணம் ,சடங்கபானியம்

(ஆயுர்வேத நிலவேம்பு குடிநீர்),முஸ்தாதி வடி ,பாலா சதுர்புஜ சூர்ணம் ,முஸ்தாதி கசாயம் போன்ற பல மருந்துகளில் மிக முக்கியமான சேர்மான்மாகிறது

தனி மூலிகை வர்க்கத்தில் -முஸ்த எனப்படும் கோரைகிலங்கும் பற்படமும் -காய்ச்சலை நிறுத்த உதவும் (அஷ்டாங்க ஹ்ருதயம் -சி -ஒன்று )

பேதியை நிறுத்த -கோரை கிழங்கு கசாயத்துடன் தேன் சேர்த்து பருக பேதி நிற்கும் (சுஸ்ருத சம்ஹித -உத்-நாற்பது )

பச்சைக் கிழங்கை அரைத்து மார்பில் பற்றாகப் போட்டால் பால் சுரக்கும் தேள் கடிபட்ட இடத்திலும் பற்றிடலாம். உடல் மீது பூசி வந்தால் வியர்வை நாற்றம் போகும்.

சிக்குன் குனியா ,மற்றுமுள்ள மர்மக்காய்ச்சளுக்கு இந்த மூலிகை கலவையே பயன்பட்டது …
கோரைக் கிழங்கு மாம்பட்டை ஆகிய இரண்டையும், இடித்துப் பொடியாக்கிப் பிட்டு செய்து, அதை நன்கு பிழிந்தெடுத்த சாற்றில் அதிடயம், இலவம் பிசின் இவற்றைச் சேர்த்து தக்க அளவில் உட்கொண்டால் கழிச்சல் ஜுரம் தீரும்.

இதன் குடிநீரை பேதி, குன்மம், வாந்தி முதலியவற்றிற்குத் தரலாம்.
இஞ்சி, கோரைக்கிழங்கு இரண்டையும் இடித்து தேன் விட்டரைத்து ஒரு சிறு சுண்டைக்காய் அளவு கொடுத்தால் சீதபேதி போகும்.

கோரைக் கிழங்கு, பேய்ப்புடல், திரிபலை, திராட்சை, வேம்பு, வெட்பாலை இவைகளை வகைக்கு கொஞ்சம் எடுத்து முறையாக குடிநீர் செய்து சாப்பிட்டால் சுரம் நீங்கும்.

கோரைப்பாய் இது சிறிய, பெரிய கோரைக்களால் செய்யப்படுகிறது. இதில் படுத்து வந்தால் பசி, மந்தம், காய்ச்சல் வேகம் நீங்கும், உடலுக்கு குளிர்ச்சி தரும், தூக்கம் உண்டாகும்.

கோரைக்கிழங்கு முழுகுநீர் கோரைக்கிழங்கு, திரிபலை, மருக்காரை, புங்கு, கொன்றை, வாலுளுவை, வாற்கோதுமை, ஏழிலைப் பாலை, கோட்டம், ஞாழல், மரமஞ்சள், வெண்கடுகு இவற்றை நீரிலிட்டுக் காய்ச்சிக் குடித்து வந்தால் பெருநோய், சொறி, வீக்கம், பாண்டு தீரும்.
கோரைக்கிழங்கு, சீந்தில், மரமஞ்சள், அன்னபேதி, கோண்டம், வெள்ளிளலோத்திரம், கந்தகம், சாம்பிராணி, வாய்விடங்கம், மனோசிலை, தாளசம், அலசிப்பட்டை இவற்றைப் பொடித்து, உடலில் எண்ணெய் தடவி, அதன்பின் மேற்படி பொடியைத் தேய்க்க, சருமப்படை, சிரங்கு நீங்கும்.
கோரை கிழங்கை காய வைத்து சூரணமாக்கி 1 முதல் 2 கிராம் வரை , தினம் இரு வேளை பாலில் உண்டு வர உடல் பருக்கும். மேலும் இந்த சூரணத்தை உடம்பில் தேய்த்து குளிக்க உடம்பில் உள்ள துர் நாற்றம் , கத்தாளை நாற்றம் ஆகியவை தீரும்.

கோரை கிழங்கு சூரணம் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். எவ்விதமான பத்தியமும் கிடையாது.கோரை புற்களை வேர் வரை தோண்டினால் கிடைக்கும் கிழங்கே கோரை கிழங்கு ஆகும்

கோரை கிழங்கை கழுவி சுத்தம் செய்து நீர்விட்டு காய்ச்சி குடித்தால் காய்ச்சல் குறையும்.
கோரைக் கிழங்கு

குணம் -நளிசுரம்,குருதி அழல் நோய்,சுரவகைகள் ,நீர்வேட்கை முப்பிணி ,கழிச்சல் ,பைத்திய தோடம்,பித்த காசம் ,கப ரோகம் குதிகாலை பற்றிய வாயு.

செய்கை -துவர்ப்பி ,வெப்பமுண்டாக்கி உரமாக்கி,சிறுநீர்பெருக்கி,வியர்வை பெருக்கி ,உள்ளழல்

ஆற்றிருது உண்டாக்கி ,புழுவகற்றி

வாந்தி இவை போகும்

தரைமட்டத்திலிருந்தே தோன்றியுள்ள தட்டையான இலையையுடைய சிறுபுல்லினம். முட்டை வடிவான நறுமணமுடைய சிறுகிழங்குகளைப் பெற்றிருக்கும். இக்கிழங்குகள் முத்தக்காசு எனக் குறிக்கப்பெறுகின்றன.

 

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!