பிரபாகரனின் கோரிக்கைகளை அனுமதிக்கவோ பெற்றுக் கொடுக்கவோ இடமளிக்க போவதில்லை-மஹிந்த

குருணாகல், தம்பதெனிய பிரதேசத்தில் இன்று (27) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் போரின் மூலம் வெற்றிக்கொள்ள நினைத்த கோரிக்களை தற்போது ஜனநாயக போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைய முயற்சிக்கின்றது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரபாகரனின் கோரிக்கைகளை அனுமதிக்கவோ பெற்றுக் கொடுக்கவோ இடமளிக்க போவதில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்

மேலும் கூறியதாவது “போர்காலத்தைப் போன்று பேரழிவானதொரு சூழல் மீண்டும் ஏற்படுவதற்கு எமது அரசாங்கத்தில் வாய்ப்பளிக்கப்படாது. எனவே மக்கள் இம்முறை பொதுத் தேர்தலில் தெளிவான முடிவொன்றினை எடுக்க வேண்டும்.யுத்தத்தின் போது ஏற்பட்ட பேரழிவு காரணமாக கல்வி ஆற்றல் உடைய 60 ஆயிரம் இளைஞர்களை நாடு இழந்தது. பட்டதாரிகள் பெருமளவானோர் இந்த பேரழிவான சூழலில் கொல்லப்பட்டனர் என்றார்.

மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பு வடக்கையும் கிழக்கையும் வேறுபடுத்தி தனியொரு இராச்சியத்தை கட்டியெழுப்புவதற்காக முயற்சித்த போதும் எமது அரசாங்கத்தால் புலிகளின் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு புதிய கல்வியைப் பெற்றுக் கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதோடு தொழிற் பயிற்சிகளையும் தொழிநுட்ப கல்வியையும் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றார்.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!