ஐ.டீ.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கைது!!!

முல்லேரியா ஐ.டீ.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
முல்லேரியா ஐ.டீ.எச் வைத்தியசாலையில் இருந்து இன்று (24) காலை 41 வயதான மொஹமட் காசிம் மொஹமட் நசீம் என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு உடன் தகவல் வழங்குமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதனை அடுத்து தப்பிச் சென்ற கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளான நபரை தேடி கண்டுபிடிக்கும் நோக்கில் பல குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன.

இதனை அடுத்து சற்று முன்னர் குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பகுதியில் இருந்த கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐ.டீ.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற குறித்த நபர் கோட்டை, பிரதான வீதியில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றின் மூலமே கொழும்பு தேசிய வைத்தியசாலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!