இலங்கை

இலங்கை சந்தையில் வாகனங்களுக்கு தட்டுப்பாடு?

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையில் பெரும் தட்டுப்பாடான நிலை ஏற்படும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் வெளியிட்டுள்ளார். தற்போது உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் பரவலின் காரணமாக விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும் சுகாதார நடைமுறைகள் காரணமாகவே வாகனங்களை இறக்குமதி செய்யமுடியாத நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே கொள்வனவாளர்களால் அதிகம் கேட்கப்படும் வாகனங்களுக்கு தற்போது வரையிலும் சந்தையில் …

Read More »

சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்தவர் கைது

மாத்தளையில் உள்ள கலேவெல பிரசேத்தில் 8 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி பின்னர் கொலை செய்த 59-வயதுடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (2) தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே நாளை (04) வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.இதன்போது குறித்த சந்தேக நபரை (59-வயது) மனநல மருத்துவரிடம் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.

Read More »

யாழ் மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்ட வாக்காளர் பின்பற்றவேண்டிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள்

பாராளுமன்ற தேர்தல் தினத்தன்று ஒவ்வொரு வாக்காளர்களும் வாக்களிக்கச் செல்லும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்பில் யாழ் மாவட்ட தேர்தல் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அது வருமாறு, 1. வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லும் போது மூக்கிலிருந்து நாடி வரையான பகுதியை மறைக்கும்படியான முறையில் முகக்கவசம் அணிந்து செல்லுதல் வேண்டும். முகக்கவசம் அணியாத எந்த வாக்காளர்களும் வாக்களிப்பு நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 2. வாக்களிப்பு நிலையத்திற்கு வந்தவுடன் …

Read More »

பிரபாகரனின் கோரிக்கைகளை அனுமதிக்கவோ பெற்றுக் கொடுக்கவோ இடமளிக்க போவதில்லை-மஹிந்த

குருணாகல், தம்பதெனிய பிரதேசத்தில் இன்று (27) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் போரின் மூலம் வெற்றிக்கொள்ள நினைத்த கோரிக்களை தற்போது ஜனநாயக போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைய முயற்சிக்கின்றது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரபாகரனின் கோரிக்கைகளை அனுமதிக்கவோ பெற்றுக் கொடுக்கவோ இடமளிக்க போவதில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் மேலும் கூறியதாவது “போர்காலத்தைப் போன்று பேரழிவானதொரு சூழல் மீண்டும் ஏற்படுவதற்கு எமது அரசாங்கத்தில் வாய்ப்பளிக்கப்படாது. எனவே மக்கள் இம்முறை …

Read More »

தனிமைப்படுத்தல் மையங்களில் இன்னும் மூவாயிரம் பேர்?

மொத்தமாக நாட்டில் உள்ள 44 தனிமைப்படுத்தல் மைங்களில் மூவாயிரத்து 556 நபர்கள் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இதேவேளை 26 ஆயிரத்து 942 பேர் முத்தரப்பு படையினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து தனிமைப்படுத்தல் நடைமுறையை நிறைவுசெய்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

Read More »

ஐ.டீ.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கைது!!!

முல்லேரியா ஐ.டீ.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். முல்லேரியா ஐ.டீ.எச் வைத்தியசாலையில் இருந்து இன்று (24) காலை 41 வயதான மொஹமட் காசிம் மொஹமட் நசீம் என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு உடன் தகவல் வழங்குமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனை …

Read More »

யாழ் பல்கலையில் கறுப்பு ஜீலை நினைவு நாள் அனுஸ்ட்டிப்பு

கறுப்பு யூலை இனக்கலவர தாக்குதலில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு சொத்துக்கள் சேதமாக்கப்பட்ட 37ம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல் இன்று (23) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Read More »

நல்லூர் திருவிழாவிற்கு மஹிந்த விடுத்த அவசர உத்தரவு!!!

எதிர்வரும் 24ம் திகதி கொடியேற்றத்துடன், நல்லூர் ஆலய உற்சவம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆலய தர்மகர்த்தா பிரதமரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, கலந்துரையாடியதன் பின்னரே பிரதமர் இந்த அவசர உத்தரவினை பிறப்பித்துள்ளார். இதேவேளை நல்லூர் உற்சவத்தின் போது விதிக்கப்பட்டிருந்த சில் கட்டுப்பாடுகளை தளர்த்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவசர உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி, கட்டுப்பாடுகள் எதனையும் விதிக்காமல் சமூக இடைவெளியை பேணி, இடையூறுகள் எதுவும் இன்றி வழிபாடுகளை மேற்கொள்ள பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு …

Read More »

இன்று மட்டும் இலங்கையில் 25பேருக்கு கொரோனா தொற்று!!!

இலங்கையில் 25பேருக்கு கொரோனா தொற்று!!! இலங்கையில் கொரோனா சில தினங்களாக கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில் இன்று மட்டும் இலங்கையில் 25பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் இன்று இதுவரை கந்தக்காடு புனர்வாழ்வு மைய தொடர்பு காரணமாக 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மற்றும் சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,642 ஆக உயர்ந்துள்ளது.

Read More »
error: Content is protected !!