மாத விடாயை தள்ளிப்போட உதவும் இயற்கை உணவுகளா?

வீட்டில் பண்டிகை மற்றும் விஷேச நாட்களில், முழுமையான மன ஈடுபாட்டுடன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியாமல், ஒரு அச்சத்துடனே, இருக்கும் சூழ்நிலை.
எப்படி இந்த பாதிப்பிலிருந்து மீண்டு, அந்த விழாக்களில் முழுமையான ஈடுபாட்டுடன் கலந்து கொள்வது என்று !

மறுநாள் அவசியம் செல்ல வேண்டிய நெருங்கிய உறவினர் இல்ல வைபவங்கள், குடும்ப நண்பர்கள் இல்ல விழாக்கள், இவற்றை எல்லாம் ஒரு வித அச்சத்துடனே, அணுக வேண்டிய நிலைமை, சில பெண்களுக்கு உண்டாகும்.

இதற்கெல்லாம், பெருங்காரணமாக இருப்பது, வழக்கமாக மாதாந்திர விலக்கு வரும் நாட்கள், விஷேசங்களின் நேரங்களில், அது வந்து விடுமோ, அப்படி ஆகி விட்டால், பெரும் சங்கடமாகி விடுமே, போன்ற மனக் குழப்பத்தில்தான், அவர்கள் பலத்த யோசனைகளில் ஆழ்ந்திருப்பார்கள்.

இதனால், அவர்களின் அப்போதைய சங்கடங்கள் தீர்ந்தாலும், அவை பின்னர் பெரும் உடல் நல பாதிப்புகளை, அவர்களுக்கு கொண்டு வரும் என்பதை, அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

இதுபோன்று வீடுகளில் நடக்கும் விழாக்களிலும் சரி, தவிர்க்க முடியாமல் கலந்து கொள்ள வேண்டிய குடும்ப நிகழ்வுகளாக இருந்தாலும் சரி, மனம் ஒன்றி, அந்த மகிழ்ச்சி தரும் விஷேசங்களில் கலந்துகொள்ள முதலில், உடல் நிலை ஒத்துழைக்க வேண்டும்.

அதற்காக, இதுபோன்ற பாதிப்புகளை தவிர்ப்பதற்காக, பெண்கள் மாத விலக்கு சங்கடங்களைத் தவிர்க்க, மருந்துக்கடைகளில் கிடைக்கும் அலோபதி மாத்திரைகளை எடுத்துக் கொள்வர்.

மாத விலக்கைத் தள்ளிப்போடும் மருந்துகளால் ஏற்படும் பாதிப்புகள்

ஆயினும், பொதுவாக, வயிற்று வலி, வாய்க் கசப்பு, வயிற்றுப் புண், வயிற்றைப் பிறட்டுவது போன்ற உணர்வு, வாந்தி எடுக்க வருவது போல, வயிற்றில் ஆரம்பித்து தொண்டை வரை வந்து நிற்கும் வேதனை போன்ற பாதிப்புகள் ஏற்படக் கூடும். அதோடு மட்டுமல்ல, அடுத்த முறை ஏற்படும் மாதாந்திரப் போக்கின் சுழற்சி இந்த பாதிப்புகளால், முன்கூட்டியோ அல்லது சில நாட்கள் தள்ளியோ ஏற்படலாம்.

உடல் தன்மை மற்றும் உடலில் உள்ள வியாதி எதிர்ப்பு ஆற்றலின் அளவைப் பொறுத்து, பாதிப்பின் தன்மைகள் ஒருவருக்கொருவர் மாறுபடும்.

கருப்பை சுருங்கலாம்

மேலும், எல்லாவற்றையும் விட அதிக பாதிப்புகள் தர வாய்ப்புள்ள ஒரு விஷயம், இது போன்ற மருந்துகளை, அவ்வப்போது எடுத்துக் கொள்வதால், பெண்களின் கருப்பை சுருங்கி, அதுவே, நிரந்தரமாக மாறிவிடும் ஆபத்துகள் உள்ளன என்பது தான்.

இதுபோன்ற செயற்கை மருந்துகளால், உடலுக்கும் மனதுக்கும் உண்டாகும் வேதனைகளையும் சிரமங்களையும் தடுக்க, பெண்கள் பக்க விளைவுகள் தரும் அந்த மருந்துகளை, பயன்படுத்தும் முறைகளை, கடைபிடிக்காமல் இருக்க வேண்டும்.

இதனால், பெண்கள் மகப்பேறடைய வாய்ப்புள்ள காலங்களில், கருப்பையின் பாதிப்பால், கரு உண்டாவதில், சிரமங்கள் அல்லது உண்டாக முடியாத நிலைகள்கூட ஏற்படலாம்.

பின் என்ன செய்வது?

இருந்தாலும், நாங்கள் எப்படி எங்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என்பவர்களுக்கு, தற்காலங்களில் உணவுகள் மற்றும் மன அழுத்தங்கள் காரணமாக, வழக்கமான இடைவெளிகளில் மாதாந்திரப் போக்கு பெண்களுக்கு வருவதில்லை, சில நாட்கள் முன்போ அல்லது பின்னரோ வரும் நிலையில், அதையும் தள்ளிப் போடுவது என்பது, இயற்கையை நாம் எதிர்த்து பயணிப்பதைப்போல என்றாலும் கூட,
தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது, அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமே, விஷம் ஆகும்போது, மருந்துகளும் அப்படித்தானே!

சமய சந்தர்ப்பங்கள் கருதி, அரிதாக ஏற்படும் இதுபோன்ற நிகழ்வுகளில், நாம் இயற்கைப் போக்கை தடை செய்ய, மேலை மருந்துகளை நாடாமல், அவற்றின் பக்க விளைவுகளால், உடல் நலம் கெடாமல் இருக்க, இயற்கையான நிவாரணிகளைப் மிகவும் அரிதாகப் பயன் படுத்தலாம்.

வெள்ளரிப்பிஞ்சு

விலக்கு வர வாய்ப்புள்ள நாட்களுக்கு சில நாட்கள் முன்பிருந்து, வெள்ளரிப் பிஞ்சுகளை உட் கொண்டு வரலாம், இதன் மூலம், உடல் சூடு குறைந்து, விலக்கு தள்ளிப் போகும்.

வெந்தயமருந்து

மிக எளிதான முறையில் இயற்கை வழியில், உடலுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காத, ஒரு முறையை இப்போது நாம் காணலாம்.

மாதாந்திர விலக்கு வர வாய்ப்புள்ள நாட்கள் என்று நீங்கள் கருதும் நாட்களின் ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்தே, சிறிது வெந்தயத்தை எடுத்து, வாயில் இட்டு தண்ணீர் பருகி வர, விலக்கு தள்ளிப் போகும். தினமும் இது போன்று சாப்பிட்டு வர, அத்தனை நாட்களும் தள்ளிப் போகும்.

திருநீற்றுப் பச்சிலையின் சப்ஜா விதை

இந்த சப்ஜா விதைகளை சிறிதளவு எடுத்து, தயிரில் இட்டு, அதைப் பருகிவிட்டு, ஓரிரு மலை வாழைப் பழங்களை உட்கொள்ள வேண்டும். இதன் பிறகு, சிறிது தண்ணீர் பருக வேண்டும். இப்படி செய்து வந்தால், அன்றைய தினம் நிச்சயம் விலக்கு நேராது என்கின்றனர், பெரியோர்.

தயிர் செய்யும் ஜாலம்

இதேபோல, தயிரைப் பருகி வர, விலக்கு ஏற்படாது, தள்ளிச் செல்லும், மேலும், இந்த நாட்களில் அசைவத்தை முற்றிலும் விலக்க வேண்டும்.

சாதம் வடித்த கஞ்சி

விலக்கு வர வாய்ப்புள்ள நாட்களில், குக்கரில் அரிசியை வேக வைக்காமல், கஞ்சி வைத்து, சாதம் வடிக்க வேண்டும். சாதம் வடித்த கஞ்சியை சூட்டுடன் ஓரிரு தம்ளர்கள் பருகி வர, அன்றைக்கு விலக்கு ஏற்படாது.

இஞ்சிச்சாறு

இஞ்சிச்சாற்றில் அதிக அளவில் வெல்லத்தைக் கலந்து பருக, பலன்கள் உடனே கிடைக்கும்.

பொட்டுக்கடலை வைத்தியம்

வீடுகளில், தேங்காய் மிளகாய் சட்னிக்கு, பொட்டுக் கடலையைப் போல, சிறந்த சுவையூட்டி ஏதுமில்லை. அத்தகைய சுவை மிகுந்த பொட்டுக் கடலையை, காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில், நன்கு மென்று தின்று, தண்ணீர் பருகி வர வேண்டும். மற்ற காலை பானங்கள் எல்லாம், இதை உட்கொண்ட சில மணி நேரங்கள், கழிந்த பின்னர்தான்.

இப்படி செய்து வந்தால், அன்று விலக்கை தள்ளி விடலாம், தேவைப்பட்டால், தினமும் இதுபோன்று, சாப்பிட அந்த நாளிலும் விலக்கை தள்ளிப் போட முடியும். பக்க விளைவுகள் இல்லாத, உடலுக்கு சிறந்த இயற்கை வழி இது.

இவை போன்ற, இயற்கை வழிகள் மூலம், விலக்கு ஏற்பட்டு விடுமோ என்ற எந்தவித அச்சமும் இன்றி, மாதந்திர விலக்கை இயல்பாகத் தள்ளி வைத்து, வீட்டின் விஷேசங்களை, நலமுடன் செய்து முடிக்கலாம்.

வெற்றிலை

சிறிது பச்சைக்கற்பூரத்தை ஓரிரு வெற்றிலைகளில் வைத்து, நன்கு மென்று விழுங்கிவர, அன்றைய தினம், மாதந்திர விலக்கு ஏற்படும்.
இதுபோன்ற, இயற்கை வழியில் கிடைக்கும் தீர்வுகளை, தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டும் பயன்படுத்தி வர, உடலும் நலமாகும், மனதும் வளமாகும்…

பக்க விளைவு

விஷேசங்கள், விழாக்கள் முடிந்த பின்னர், மாதாந்திர விலக்கை அடைய இனி தடைகள் ஏதுமில்லை என்ற போதிலும், விலக்கு தடைப்பட முன்னர் எடுத்துக் கொண்ட இயற்கை மருந்துகளினால், சிறிது நாட்கள் தள்ளிப்போகக் கூடும்.
ஆயினும், உடனே நிகழ்ந்தால், நன்றாக இருக்கும், அடுத்த வாரம் வேறொரு நிகழ்ச்சி வேறு இருக்கிறதே என்று மனதில் எண்ணிக் கொண்டே, அதை எப்படி நல்ல முறையில் முடிக்கப் போகிறோம், அதற்குள் இந்த விலக்கு ஏற்பட்டு விட்டால், நன்றாக இருக்குமே, என்று மீண்டும் மனக் குழப்பத்தில் இருப்பவர்களுக்கு, ஒரு இயற்கைத் தீர்வு இருக்கிறது.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!